அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது - ஐவருக்கு கொரோனா தொற்று - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது - ஐவருக்கு கொரோனா தொற்று

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம், மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர நிலைமை காரணமாக, இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு பணிபுரியும் ஐவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள தூதகரத்தின் slemb.abudhabi@mfa.gov.lk எனும் இணையத்தள முகவரி மூலமாகவோ அல்லது, 800119119 எனும் தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிகளவான அழைப்புகள் கிடைப்பதால், தூதரகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடியாது என்பதோடு, மின்னஞ்சல் வாயிலாக தூதரகம் பொதுமக்களை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment