(இராஐதுரை ஹஷான்)
மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகள் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும். அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச, தனியார் துறை சேவையாளர்கள் திங்கட்கிழமை முதல் கடமைகளில் ஈடுபடுவதற்கான விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரையில் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும். அனைத்து பிரதேசங்களுக்கும் புகையிரத சேவைகள் ஈடுப்படுத்தப்படும்.
அரச, தனியார் துறையின் பிரதானிகள் ஊடாக பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கு அமைய சேவையாளர்கள் புகையிரத சேவையில் ஈடுபட முடியும். வாராந்தம் சேவையில் ஈடுபடவுள்ள சேவையாளர்களின் பெயர்ப்பட்டியல் புதன்கிழமைக்கு முன்னர் புகையிரத திணைக்களத்திற்கு குறித்த நிறுவனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத பற்றுச்சீட்டு பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக அனுப்பி வைக்கப்படும். புகையிரத பெட்டிகளில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். பயணிகள் அனைவரும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள விடயங்களை பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment