குடிசையில் வாழ்ந்து மழைக்கு தத்தலித்த குடும்பத்திற்கு உதவிய பிரதேச சபை உறுப்பினர் கபூர் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

குடிசையில் வாழ்ந்து மழைக்கு தத்தலித்த குடும்பத்திற்கு உதவிய பிரதேச சபை உறுப்பினர் கபூர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பத்திற்கு வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் அவரது குழுவினரால் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் பல வருடங்களாக வறுமைக் கோட்டின் கீழ் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்திற்கு மழை காலம் என்பதனால் தற்காலிக தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் அவரது குழுவினரால் தனவந்தர் ஒருவரின் உதவியுடன் படங்கு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு குடிசையின் மீது விரிக்கப்பட்டது.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மழையில் இருந்து தற்காலிகமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், இவர்களுக்கு நிரந்தர தீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad