வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

வீடுகளில் டெங்கு பரிசோதனைகள்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையையடுத்து டெங்கு நோய் பரவக்கூடிய நிலை அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் வீடுகளின் சுற்றாடல் பகுதியை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அருனா ஜெயசேகர தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோய் பரவுதை தடுப்பதற்கும் ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டில் 413 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு, நாட்டில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

No comments:

Post a Comment