இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம், கொலையில் முடிந்தது - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம், கொலையில் முடிந்தது

வென்னப்புவ, வைக்கால் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டுத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவருக்கு இடையில் நேற்றையதினம் (01) ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டுகொண்டு சென்றதன் காரணமாக, ஒருவர் மற்றொருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment