வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - நியூசிலாந்து பிரதமர் ஆதரவு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 21, 2020

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - நியூசிலாந்து பிரதமர் ஆதரவு

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசை அந்நாட்டில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனாவால் 21 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், வாரத்தில் 4 நாட்கள் வேலை வேண்டும் என நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வாரத்தில் 3 நாள் விடுமுறை என்பது நீண்ட விடுமுறையாகும். இதனால் நியூசிலாந்து மக்கள் நாடு முழுவதும் அதிகம் பயணிக்க வழி கிடைக்கும். 

தற்போது நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த இது வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad