நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட மின் விநியோக தடையை, 24 மணி நேரத்திற்குள் சரி செய்யுமாறு இலங்கை மின்சார சபைக்கு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சுமார் 45,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறு, மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிவலு மின் கம்பிகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் 780 குடும்பங்களுக்கு தடைப்பட்ட மின்சாரத்தை மீண்டும் வழங்குவது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
No comments:
Post a Comment