எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் வரை கன மழை - 10 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் வரை கன மழை - 10 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்தில் 06 மாவட்டங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாமென்று, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கமைய நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் அடை மழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், இன்று (19) காலை 7.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் அதிக மழை வீழ்ச்சியாக காலியின் நெலுவ பிரதேசத்தில் 168.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களு கங்கை மற்றும் கிளை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குருவிட்ட, அயகம, கிரிஎல்ல, எலபாத்த பகுதிகளில் வௌ்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு, நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இரத்தினபுரி, காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment