கொவிட்-19 நிதியத்தின் வைப்பு ஒரு பில்லியனை தாண்டியது - News View

Breaking

Post Top Ad

Saturday, May 16, 2020

கொவிட்-19 நிதியத்தின் வைப்பு ஒரு பில்லியனை தாண்டியது

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஸ்ரீலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. 

அதற்கான காசோலைகள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 

மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின் பெரேரா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, உள்ளிட்ட தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முக்கியஸ்தர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். 

Naturub Industries தனியார் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாவையும், டிசில் குரே ஒரு இலட்சம் ரூபாவையும், முன்னாள் அமைச்சரவை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஒரு மில்லியன் ரூபாவையும், ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி ஒரு மில்லியன் ரூபாவையும், இலங்கை கால்பந்து சம்மேளனம் 02 மில்லியன் ரூபாவையும், Bharti Airtel Lanka தனியார் நிறுவனம் 1.2மில்லியன் ரூபாவையும், Certis Lanka Security Solution தனியார் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், ரிச்சட் பெர்னாண்டோ ஒரு மில்லியன் ரூபாவையும், திரு. எஸ்.ஏ. சமரதுங்க ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். 

நேற்று பிற்பகலாகும் போது கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad