இராணுவ வீரர் திடீர் உயிரிழப்பு - மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

இராணுவ வீரர் திடீர் உயிரிழப்பு - மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

அம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு (21) ஒப்படைக்கப்பட்டது. 

42 வயதுடைய ஜயவிக்கிரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுவாச பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரி, சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

அதுவரை சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன அவர் எனவும் கூறினார்.

பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)

No comments:

Post a Comment