ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டாவது நாளாக அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,45,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment