மட்டக்களப்பில் ஐந்து கோடி பத்து இலட்சம் ரூபா 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

மட்டக்களப்பில் ஐந்து கோடி பத்து இலட்சம் ரூபா 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு வவுணதீவில் 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நேற்று 20 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பணியில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சுபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர்.
இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெரும் குடும்பங்கள் 7640 க்கும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள் 2250 க்கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பம் 268 க்கும் மேல்முறையீடு செய்த 48 குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த பணிகளில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், முகாமத்துவப் பணிப்பாளர் கே.தங்கதுரை, சமுர்த்தி புது மண்டபதடி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தில்லையம்மா, கரவெட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அசோக்குமார் பிரியதர்சினி, மகிழவட்டவான் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புவனேஸ் வரி ஜெயசிங்கம், ஆயித்தியமலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் கிரிஸ்ணவேணி கநேசனாதன் ஆகியோரும் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad