அரசாங்கம் தங்கள் சர்வதிகார ஆட்சிமுறையினை பாராளுமன்றத்திலும் நிறுவுவதற்காக தொடர்ந்தும் தங்களின் அராஜகத்தனமான வேலைத்திட்டங்கைள முன்னெடுத்து வருகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
நேற்று விசுமடு பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கூறுகையில், உலகத்தில் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் வல்லைமை பெற்ற அனைத்து நாடுகளும் நோய்த் தாக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக தமது நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருந்தாலும் எதிர்காலத்தில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
எமது நாட்டினை பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் தன்னிறைவை அடைந்த நாடாக கருதமுடியாது. உலகத்துடன் ஒப்பீட்டுபாக்கும் அளவில் மிக மோசமாக பின்னடைவினை சந்தித்துக்கொண்டிருக்கின்ற நாடு. எதிர்காலத்தில் பாரியளவில் நோய் பரவுமாக இருந்தால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதுதான் எங்களின் கேள்வி.
ஜனநாயகம் என்ற போர்வையில் பயங்கரவாத்தினை ஏவிவிட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி பீடத்தினை கைப்பற்றிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக தமது குறுக்குத்தனமான அரசியலை நிர்ணயித்துக்கொள்வதற்காக பாராளுமன்ற தேர்தலை இலக்காக வைத்து தமது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தை விட அதற்கு பின்னரான காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கின்றது.கடந்த நாட்களில் இந்த அரசு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட சில விடயங்கள் வரவேற்கத்தக்கது. சட்டரீதியான விடயங்களாக இருக்கலாம் மருத்துவரீதியான விடயங்களாக இருக்கலாம்.
இருந்தாலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் பொருத்தமான காலமாக இருக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்தில் உலகளாவிய கொடிய நோயின் தாக்கம் இலங்கைக்கும் வந்திருந்தது.
அந்த வேளையில் சரியான முடிவினை இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. அந்த வேளையிலும் தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தினை கலைத்து வேட்பாளர்களை தெரிவு செய்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து அரசியலை இலக்காக கொண்டே இந்த அரசு செயற்பட்டது என்றார்.
புதுக்குடியிருப்பு நிருபர்
No comments:
Post a Comment