கொரோனா ஒழிப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் செயற்பாடு தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை (02) விசேட ஒளிபரப்பொன்றை ஊடகங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (30) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது இது அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பெரும்பாலான அரச பிரிவினரால் பாரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
நோயாளர்கள் இருக்கும் பிரதேசங்களை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு உன்னதமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.
அதற்கமைவாக இந்த பணிகளின் போது அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்புக்கள் மற்றும் அவர்களது செற்பாடு, அவர்கள் செயல்பட்ட முறை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (02) காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விசேட நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்புவதற்கு ஊடகங்களின் பங்களிப்பை பெற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment