கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் சிக்கியிருந்த மற்றுமொரு மாணவர் குழுவினரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம், இன்று (30) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
UL 1188 எனும் விமானம், இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தது.
இன்று மாலை 5.20 மணியளவில் குறித்த விமானம் இலங்கை மாணவர்கள் 125 பேருடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்தியாவில் சிக்கியிருந்த குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இன்று முற்பகல் 10.15 மணிக்கு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் கொல்கத்தா நோக்கிப் புறப்பட்டிருந்தது.
இதற்கு முன்னரும் நான்கு சந்தர்ப்பங்களில் இந்தியாவில் சிக்கியிருந்த உயர் கற்கை நெறி மாணவர்கள், இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்தோடு நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலும் சிக்கியிருந்த மாணவர்களை அழைத்துவர ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
No comments:
Post a Comment