எச்சரித்தார் டிரம்ப் - இறங்கி வந்தார் மோடி - மருந்து ஏற்றுமதி தடை தளர்த்தப்படுகின்றது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

எச்சரித்தார் டிரம்ப் - இறங்கி வந்தார் மோடி - மருந்து ஏற்றுமதி தடை தளர்த்தப்படுகின்றது

மலேரியா தடுப்பு மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஓரளவு தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

கொரோன வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றிற்கு மலேரிய தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

பொறுப்புணர்வு வாய்ந்த எந்த அரசாங்கத்தையும் போல எங்கள் மக்களுக்கு போதியளவு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள முதல் கடமை என அவர் தெரிவித்துள்ளார். 

அனைத்து விதமான அவசர சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கான மருந்துகள் இந்தியாவில் உள்ளன என்பதை உறுதி செய்த பின்னரே மருந்து ஏற்றுமதி தடையை சிறிது தளர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

No comments:

Post a Comment