உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா வைரஸ், அமெரிக்காவையும் நடுநடுங்க வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது முகக் கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ”நான் முகக் கவசம் அணிய மாட்டேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் "அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்" என யாரேனும் வருகை தரும்போது தன்னால் முகக் கவசத்தை அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது எனவும், அது தனக்கு சௌகரியம் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு, "நீங்களும் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அணிய மாட்டேன் என்று நினைக்கிறேன்" என டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க பொதுமக்களுக்கு முகக் கவசம் பாரியளவு பற்றக்குறையாக இருப்பதனால், துணியால் ஆன முகக் கவசத்தை பொதுவெளியில் செல்லும்போது மக்கள் அணியலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி இருந்தது.
No comments:
Post a Comment