இத்தாலியில் கொவிட் 19 வைரஸின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு கொவிட் 19 பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் 60 வயதுக்கு குறைவானவர்களில், 15 சதவிகிதமானவர்கள் 30, 40, மற்றும் 50 வயதுகளுக்குட்படவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
மேலும் அவர்கள் கொவிட் 19 வைரஸ் காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவர்களுக்கு அடிப்படை சுகாதார பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் டொக்டர் மைக் ரியான், வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உறையாற்றும் போது, கொரியாவில் கொவிட் 19 வைரஸ் காரணமாக ஏற்பட்ட ஆறு இறப்புகளில் ஒன்று 60 வயதிற்குட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தாலியில் கடந்த ஆறு வாரங்களில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) குறைந்தது 10 முதல் 15 சதவீதமானோர் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இளைய வயதினர் ஏன் இறக்கின்றார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சில நாடுகளில் 30, 40 மற்றும் 50 வயதிற்குட்பட்ட வயதினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் பதிவான 5 இறப்புகளில் இறுதியாக மரணித்தவர் 50 வயதிற்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், கொவிட் 19 காரணமாக கடுமையான நோயை அனுபவிக்கும் பெரும்பாலானோர் இன்னும் வயதானவர்களாகவும் பிற உடல் நலப் பிரச்சினைகள் உடையவர்களாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment