நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நியூசிலாந்து முழுவதும் இதுவரை 1,500க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 80 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) ‘நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்’ என நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.

கொரோனா வைரசை ‘முற்றிலும் ஒழிக்கும் இலக்கை’ அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து நேற்று (28) காலை முதல் நியூசிலாந்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். 

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் 4 இலட்சம் பேர் தங்கள் பணிகளுக்கு நேற்று சென்றுள்ளனர். சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment