தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் - சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் - சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன்

(எம் நியூட்டன்) 

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்பட வேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பதை 100 வீதம் உறுதியாக கூற முடியும். என சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார். 

தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிலை தொடா்பாக ஊடகவியலாளா்கள் கருத்து கேட்டபோதே அவா் இதனை தெரிவித்தார். 

இது தொடா்பாக மேலும் அவா் தெரிவிக்கையில், ஒரு ஊா் மக்கள், ஒரு விமானத்தில் பயணித்தவா்கள் என கூட்டம் கூட்டமாக மக்களை ஒரு கூரையின் கீழ் தனிமைப்படுத்துவது தவறானது. அவ்வாறான நிலையில் தொற்றுக்குள்ளாகாதவா்களுக்கு கூட தொற்று ஏற்படுவதற்கு சந்தா்ப்பங்கள் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீளமைப்பு செய்யப்பட வேண்டும். 

குறிப்பாக பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2ம் முறை அடையாளம் காணப்பட்டவா்களுக்கு 30 நாட்களின் பின்னா் தொற்று அடையாளம் காணப்பட்டது. அவ்வாறு 30 நாட்களின் பின்னா் தொற்று அடையாளம் காணப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு வீதமாகவே நடந்திருக்கின்றது. 

பலாலியில் அடையாளம் காணப்பட்டதைபோல் 10 போ் அடையாளம் காணப்பட முடியாது. இது பலாலிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் எவையும் பாதுகாப்பானவை அல்ல. அவை மீளமைக்கப்பட வேண்டும். 

மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியிருக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு பாிசோதனை நடாத்த வேண்டும். அவ்வாறான பாிசோதனையின் ஊடாகவே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு தொற்று இல்லை. என்பதை 100 வீதம் உறுதிப்படுத்த முடியும் என்றாா்.

No comments:

Post a Comment