(இரா.செல்வராஜா)
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட பொறிமுறை திட்டமொன்றை வகுப்பது அவசியமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் மக்கள் அத்தியவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகித்து அவர்களின் நலன்களை பெற்றுக் கொள்ள எண்ணுகின்றனர்.
எனவே இதனை தடுக்கும் வகையில் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு பொறிமுறையொன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
ஆளுநர்கள், அமைச்சிகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், ஆகியோர் மட்டத்தில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment