லிபியாவின் முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
68 வயதான ஜிப்ரில் கெய்ரோவில் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 21 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களின் பின் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு வாரங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
2011 இல் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை வெளியேற்றிய உள்நாட்டு எழுச்சியின் பின் லிபியாவின் உண்மையான அரசாங்கமான தேசிய இடைக்கால கவுன்சிலின் பிரதமராக இவர் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment