இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் பரீட்சை விபரங்கள் இந்தியத் தூதரகத்தால் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 28, 2020

இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் பரீட்சை விபரங்கள் இந்தியத் தூதரகத்தால் வெளியீடு

இந்தியாவில் உயர் கல்வியினைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை வழங்குவதற்காக நடாத்தப்படுகின்ற பரீட்சை விபரங்கள் இந்தியத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கை மாணவர்களின் நலன்கருதி IND SAT 2020 பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை நடத்தப்படவுள்ளது. அத்துடன் இந்த பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 30 ஏப்ரல் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சையானது இணையவழி (Online) மூலமாக நடத்தப்படவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் தமது வீடுகளிலிருந்தவாறு பரீட்சையினை எழுத முடியும். 

இந்த பரீட்சைப் புள்ளிகள் மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களுக்காக கவனத்தில் கொள்ளப்படுமே தவிர 'ஸ்டடி இன் இந்தியா' (Study In India) திட்டத்தின் கீழ் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள முடியாது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை www.studyinindia.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆர்வமுள்ள பரீட்சார்திகள் 30 ஏப்ரல் 2020க்கு முன்னர் இணையவழி மூலமாக பதிவு செய்யமுடியும்.

No comments:

Post a Comment