திருகோணமலை நீதிமன்ற வழக்குகளுக்கு புதிய திகதி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 25, 2020

திருகோணமலை நீதிமன்ற வழக்குகளுக்கு புதிய திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட சூழ்நிலை காரணமாக திருகோணமலை முதலாம் இலக்க நீதிமன்றத்தில் திகதியிடப்பட்ட வழக்குகளுக்கு புதிய திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மார்ச் 16ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 24ஆம் திகதி வரை நாள் ஒதுக்கப்பட்ட வழக்குளுக்கு ஜூன் 01ஆம் திகதியிலிருந்து புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தின் பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.

அதனடிப்படையில் 2020 மார்ச் மாதம் 16ஆம் திகதி திகதி இடப்பட்ட வழக்குகள் யாவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளன.

அதேபோன்று ஏனைய வழக்குகளுக்கான திகதிகளும் நீதிமன்ற விளம்பரப் பலகையில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment