நயினாதீவுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை உதவி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

நயினாதீவுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை உதவி

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மேலும் பொதுமக்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நயினாதீவு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று நேற்றையதினம் (31) ஆரம்பிக்கப்பட்டது. 

இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் உத்தரவின் கீழ் கடற்படை பிரதித் தலைமை பிரதானி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் வடக்கு கடறப்படை வீரர்களால் கடல் மூலமான பயண வசதிகள் வழங்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து இதேபோன்ற சமூக பொறுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் வழங்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment