உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை - மூன்று வேலை சோறு உண்ட மக்கள் எமது மக்கள் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை - மூன்று வேலை சோறு உண்ட மக்கள் எமது மக்கள் அமைச்சர் பந்துல

(ஆர்.யசி) 

நாட்டின் தேசிய உற்பத்தியை பலப்படுத்தி உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் சிறகவரை, பைற்றங்காய், வெண்டிக்காய், கறிமிளகாய், மிளகாய் ஆகியவற்றிகான விதைகள் வெறுமனே 20 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

இன்று தொடக்கம் நாட்டில் சகல பகுதிகளிலும் விவசாயிகள் 20 ரூபாவில் விதைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள பாரிய உணவுத் தட்டுப்பாடு இப்போது உலகில் சகல நாடுகளிலும் நிலவுகின்றது. அனைத்து நாடுகளில் தமக்கான உணவு உற்பத்தியை பலப்படுத்த போராடி வருகின்றனர். 

இலங்கையிலும் இறக்குமதிகள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உள்ளது. எனினும் நாம் மூன்று வேலை சோறு உண்ட மக்கள் எமது மக்கள். எமக்கான தேசிய உற்பத்திகளை நாமே எப்போதும் உருவாக்கிக் கொண்ட வரலாறே எமக்கு உள்ளது. 

பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு முன்னர் இருந்தே நாம் எமக்கான உணவு உற்பத்திகளை பெருக்கிக் கொண்டு எமக்கான தேவைகளை பூர்த்து செய்துள்ளோம். ஆகவே மீண்டும் எமது பண்டைய முறைமையை உருவாக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

அனைவரும் ஒரு நாட்டவராக எமக்கான தேசிய உணவு உற்பத்தியை பெருக்கிக் கொள்ள எமது விவசாயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க இன்றில் இருந்து தேசிய விவசாய வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம். 

அந்த வகையில் சிறகவரை, பைற்றங்காய், வெண்டிக்காய், கறிமிளகாய், மிளகாய் ஆகியவற்றிகான விதைகள் வெறுமனே 20 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

சமுர்த்தி அதிகாரிகள் மூலமாக நாடு பூராகவும் இந்த விதைகளை அனுப்பி நாட்டிலுள்ள சகல விவசாயிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

நாட்டில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் தற்போது மூன்று மாத கால விடுமுறையில் உள்ள நிலையில் அவர்களும் தற்காலிக விவசாயத்தில் ஈடுபடும் விதமாக இந்த பயிர்களை வீடுகளில் பயிரிட்டு தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய முடியும். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு இறக்குமதி பொருட்களை தடை செய்து அவற்றை தேசிய ரீதியில் உற்பத்தி செய்ய வலியுறுத்தியிருந்தார். 

இப்போது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து நாடுகளுக்குமான ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இப்போது நாம் தாமாகவே தேசிய உற்பத்திகளை பலபடுத்த வேண்டும். ஆகவே இதில் மாற்று வேலைத்திட்டம் எதனையும் கையாள முடியாது என்றார்.

No comments:

Post a Comment