இழுபறிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது மருதானை நபரின் ஜனாஸா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

இழுபறிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது மருதானை நபரின் ஜனாஸா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்த 3ஆவது நபரின் ஜனாஸா (சடலம்) இன்று (02) பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

நேற்றையதினம் (01) மரணித்த மருதானையைச் சேர்ந்த 73 வயதான குறித்த நபரின் ஜனாஸா, முல்லேரியாவிலுள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் மகன் மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் மட்டும் சடலத்தை பார்வை இடவும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. 

கொழும்பு மருதானையைச் சேர்ந்த 73 வயதான, தங்க நகை வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவரே நேற்று உயிரிழந்தார். 

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அங்கொடை தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது தகனம் செய்வது தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய, உடல் சீலிடப்பட்டு, மூடப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment