வவுனியா பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

வவுனியா பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் இன்று மாலை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 150ற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனோ தொற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் பேருந்துகளின் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த கொரோனோ தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேரும் பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ் 9 பேரிடமும் சுகாதார பரிசோதகர்களால் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகள் கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா தீபன்

No comments:

Post a Comment