கொரோனா வைரஸ் தொற்றால் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள 6.6. மில்லியன் அமெரிக்கர்கள் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள 6.6. மில்லியன் அமெரிக்கர்கள் !

கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்தது ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்னிலையில் உள்ளது. 

அங்கு 216,722 பேர் கொரோனா தொற்றாளர்களாக தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5,100 க்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment