(நா.தனுஜா)
இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 50 பேரைக் கொண்ட விமானம் இன்று கொழும்பிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் ஏற்பாட்டினூடாக இலங்கையிலிருந்த 50 பாகிஸ்தானியர்களை கொண்ட இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 1185 இலங்கை நேரப்படி இன்று காலை 7.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்களைக் வழியனுப்புவதற்காக உயர்ஸ்தானிகர் சார்பில் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அகமது விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக சிரமங்களை எதிர்கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு உரிய உதவிகளை உடனடியாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பிரஜைகள் தமது நன்றியை வெளிப்படுத்தினார்.
No comments:
Post a Comment