உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் உத்தரவை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மே மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது மனைவி மற்றும் சகோதரரினால் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், குமுதினி விக்ரமசிங்க, தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
இம்மனுவின் பிரதிவாதிகளாக, குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, பிரதிவாதிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
அத்துடன் ஒரே பிரச்சினை தொடர்பில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தமை தொடர்பில் அடுத்த அமர்வில் விளக்கமளிக்குமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
No comments:
Post a Comment