ஸ்பெய்னில் கொவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றினால் குறைந்தது 10,003 பேர் இறந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர். இதுவரை, ஸ்பெய்னில் 110,238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 26743 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகில் கொவிட்-19 தொற்றினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெய்ன் ஒன்றாகும், கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு பின்னால் உள்ளது.
உலகளாவிய ரீதியில் 203 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் 950,000 பேர் வரை கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதடன், 200,000 க்கும் அதிமானவர்கள் குணமடைந்துள்ளார்கள்.
இதேவேளை, இதுவரை 48,000 பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment