ஏப்ரல் 02, 03, 06 ஆம் திகதிகளில் ஓய்வூதியர்கள் மருந்து கொள்வனவிற்கு மருந்தகங்கள் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

ஏப்ரல் 02, 03, 06 ஆம் திகதிகளில் ஓய்வூதியர்கள் மருந்து கொள்வனவிற்கு மருந்தகங்கள் திறப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களையும் ஏப்ரல் 02, 03 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த மூன்று தினங்களிலும் அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக இலங்கை இராணுவத்தினால் அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் தமது மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமை, ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது ஓய்வூதிய அட்டைகளை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment