இரத்த வங்கியின் சேமிப்பு குறைவடைவு, கொடையாளர்களுக்கு அழைப்பு - வரும் முன் அழைக்கவும் 0115332153 - பதிவு செய்ய nbts.life நுழையுங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

இரத்த வங்கியின் சேமிப்பு குறைவடைவு, கொடையாளர்களுக்கு அழைப்பு - வரும் முன் அழைக்கவும் 0115332153 - பதிவு செய்ய nbts.life நுழையுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலை காரணமாக, ஏற்பட்டுள்ள நாட்டின் சூழ்நிலையில் தேசிய இரத்த வங்கியில் அதன் இரத்த சேமிப்பு குறைவடைந்துள்ளதால் கொடையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக, இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

இரத்த வங்கி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது, இரத்த மாற்றம் மிக அவசியமாகவுள்ள, வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் நம் சொந்த சகோதர சகோதரிகளுக்காக, இரத்ததானம் செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் விடுக்கும் ஒரு அழைப்பாகும்.

முன்வரும் இரத்ததானம் செய்பவர்களின் ஆரோக்கியம் இவை அனைத்திலும் பார்க்க மிக முக்கியமானது என்பதோடு, நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு, கூட்டம் திரண்டு இரத்தத்தை வழங்குவதைத் தடுக்கும் வகையில், நேரத்தை ஒதுக்கும் முறையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, 0115332153 ஐ அழைப்பதன் மூலமோ அல்லது http://nbts.life/ ஐப் பார்வையிடுவதன் மூலமோ நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு தேசிய இரத்த மாற்றீட்டு சேவை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆயினும் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவதானம்:
கடந்த மாதத்தில் நீங்கள் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ள ஒருவர் இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் வசிக்கிறாரா?

கடந்த ஒரு மாதத்தில் யாராவது வெளிநாடு சென்றிருக்கிறார்களா?

கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டில் இருந்த ஒருவருடன் உங்களுக்கு நெருங்கிய சந்திப்பு ஏற்பட்டதா?

கடந்த மூன்று மாதங்களுக்குள் நீங்கள் வெளிநாடு சென்று வந்துள்ளீர்களா?

பதில் ஆம் எனில், இந்த நேரத்தில் நீங்கள் இரத்ததானம் செய்வது உக்ந்ததல்ல.

No comments:

Post a Comment