புத்தளம் போன்று கம்பஹாவிலும் SLMC, ACMC இணைந்து போட்டியிட வியூகம் அமைத்துத் தருமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

புத்தளம் போன்று கம்பஹாவிலும் SLMC, ACMC இணைந்து போட்டியிட வியூகம் அமைத்துத் தருமாறு வேண்டுகோள்

33 வருட காலமாக இழந்தும், இழக்கப்பட்டும் வந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அரசியல் வேற்றுமைகளை மறந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து பொதுச் சின்னத்தில் (தராசு) போட்டியிட எடுத்துள்ள தீர்மானத்தினை ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (UPC) வரவேற்கிறது.

இவ்வாறானதொரு தீர்மானத்தினை கம்பஹா மாவட்டத்திலும் எடுத்து ஆண்டு ஆண்டு காலமாக இழந்தும் இழக்கப்பட்டும் வருகின்ற எமது கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கான வியூகம் ஒன்றினை அமைத்து தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களிடமும் சுமார் 65,000 க்கும் மேற்பட்ட கம்பஹா மாவட்ட முஸ்லிம் மற்றும் மலே முஸ்லிம் வாக்காளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் ( UPC) பொதுச் செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் (J.P) தெரிவித்தார்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

No comments:

Post a Comment