அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (12) பிற்பகல் இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்கும் வகையில் அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் 13 - ஏப்ரல் 20 வரை பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் தனியார் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை நடத்துவோர் விடுமுறை தொடர்பில் அவர்களே தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு எம்மால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment