எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இருந்தும் நாளை தளர்தப்பட்டிருக்கின்றன குறுகிய நேர ஊரடங்கு தளர்வு மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சில விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கண்டிப்பாக பேணுமாறு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீதிகளில் நெருக்கமாக சன நெரிசலாக பயணிப்பதையும். சந்தைகள் வியாபார நிலையங்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது மூன்று அடி இடைவெளியினை பின்பற்றுமாறும், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்தே வியாபாரம் செய்யுமாறும் மக்கள் வெளியே வரும் போதும் கட்டாயமாக முகக் கவசம் அல்லது முகத்தை மறைக்கும் ஒழுங்குகளைப் பின்பற்றுமாறும், சிறுபிள்ளைகள் வயது முதிர்ந்தவர்களை வெளியே அழைத்து வருவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
அங்காடி வியாபாரிகள் மீன் வியாபாரிகள் மரக்கறி வியாபாரிகள் முகக் கவசங்களை அணிந்து வீதி வீதியாக சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு சன நெரிசல் ஏற்படும் வழிகளை குறைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக தேவையற்ற பயணங்கள், மக்கள் நெரிசலை பொருட்படுத்தாது வியாபாரம் செய்யும் வர்த்தக நிலையங்கள், கூட்டம் கூட்டமாக கூடி நிற்கும் இளைஞர்கள், நெரிசல் மிக்க வாகனங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டு இவற்றை தவிர்ப்பதற்கான கண்டிப்பான உத்தரவுகளை மதிக்குமாறும் மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை கவலையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ் நடைமுறைகளை பின்பற்றுவதை தவிர்த்து உங்கள் உறவினர்கள் யாரேனும் குறித்த நோய் தொற்றுக்கு ஆளாகி மரணிக்கும் தருணத்தில் உங்கள் உறவினர்களை பார்க்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என்பதனையும் உங்கள் உறவினர்கள் உடலங்களை கூட மீண்டுமொருமுறை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டீர்கள் எனும் தீவிர நிலையை கருத்திற்கொண்டு பூரண ஒத்துழைப்பு தருமாறும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment