கோட்டை புகையிரத நிலையம், துறைமுகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

கோட்டை புகையிரத நிலையம், துறைமுகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் நடவடிக்கை

(எம்.மனோசித்ரா) 

கடற்படையினரால் கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கடற்படை தயாராகவிருப்பதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment