(இராஜதுரை ஹஷான்)
லிட்ரோ எரிவாயு (கேஸ்) லங்கா நிறுவனத்தின் வசம் தேவையான அளவு எரிவாயு தொகை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் எவ்வித தட்டுப்பாடுமின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு (கேஸ்) தட்டுப்பாடு ஏற்படாமல் நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் உள்ள லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஊடாக கேஸ் விநியோகிக்கப்பட்டு சிறப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு 0112505808 மற்றும் மாகாண அடிப்படையில் விற்பனை முகவர்களின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அழைத்து சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.
மத்திய மற்றும் மேல் மாகாணம் - குமார ஜயவர்தன ( 0777775658)
தென் மாகாணம் - நதுன் 076 3488452
வட மாகாணம் - ராஜ் குமார் 0770495501
கிழக்கு மாகாணம்-சர்ஜுன் 07737005631
No comments:
Post a Comment