சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சிங்கப்பூரில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது பெண்ணும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 64 வயது நபரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
71 வயது சிங்கப்பூர் பெண்மணி பெப்ரவரி 9 ஆம் திகதி நோய் வாய்ப்பட்டார் 23 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே அவரிற்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு வேறு பல நோய் பாதிப்புகள் உள்ளன ஆனால் இவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்துள்ள இந்தோனேசிய நபர் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment