ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சாட்சி விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 இற்கும் மேற்பட்டோரிடம் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment