கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய அறிகுறிகளை பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
வைரசிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரிட்டனின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
வைரஸ் கண்கள் மூக்கு மற்றும் தொண்டை ஊடாகவே நுழைகின்றன என்பதை ஏனைய நாடுகளின் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளோம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ஏனைய அறிகுறிகள் இல்லாதவர்கள்.
ஆனால் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இளம் நோயாளர்களிடம் இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்படாது என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் நிர்மல் குமார் அவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார். மூக்கு மூலமாகவே வைரஸ் நுழைகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொற்றுக்கள் வழமையாக தொண்டையின் பின்பகுதி மற்றும் மூக்கின் மூலமாகவே நுழைகின்றன என தெரிவித்துள்ள மருத்துவர் நட்டாலி மக்டமர்ட் இதன் காரணமாக வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு ஏற்படுவது இயல்பு என தெரிவித்துள்ளார்.
புதிய அறிகுறிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னமும் மருத்துவ சமூகத்தினர் மத்தியில் பரந்துபட்ட அளவிற்கு இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஈஎன்டி யுகே முழுமையான பாதுகாப்பு கவசங்களை மருத்துவ பணியாளர்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது இந்த சாதனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளன அவசர நோயாளிகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றன என பேராசிரியர் குமார் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment