கொரோனா வைரஸினால் யுத்த காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

கொரோனா வைரஸினால் யுத்த காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது

(செ.தேன்மொழி) 

கொரோனா வைரஸினால் யுத்த காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார். 

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அச்சம் மேலும் வலுப்பெற்றுள்ளது. 

அரசாங்கம் தற்போது இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் செலுத்தும் கவனத்தை, சீன பிரஜைகள் மீது ஏன் செலுத்தாமல் இருக்கின்றது. 

வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசெய்ன் லூன்ங் வெப்பநிலை அதிகமான பகுதிகளில் கொரோனா பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இதற்கான விஞ்ஞான கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிலவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சையை பெற்றுக் கொடுப்பதற்கான வசதிகள் எமக்கு இருக்கின்றதா, இவ்வாறு வைரஸ் தொற்று பரவ ஆரம்பிக்கும் காலத்தில் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். 

இந்த வைரஸ் பரவல் சுமார் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் அதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்கான வசதிகள் எமது நாட்டில் இருக்கின்றதா என்பது தொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

No comments:

Post a Comment