(ஆர்.விதுஷா)
பொதுத் தேர்தலை விட நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு முக்கியமானதாகும். எனவே தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை கூட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது எனவும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லை, எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
No comments:
Post a Comment