குடும்ப ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கூடியவர்கள் பயமின்றி முன்வர வேண்டும் என களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி எனும் பெயரில் புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு பிடகொட்டே சோலிஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
தூய்மையான பண்டாரநாயக்க கொள்கையை நோக்கிய பயணம் எனும் தொனிப் பொருளிலே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மங்கள விலக்கெற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் அம்சமாக புதிய இலங்கை சுதந்திர கட்சியின் கொள்கை பிரகடனத்தின் பிரதியை கட்சியின் செயலாளர் திலக் வராகொடவினால் கட்சியின் தலைவர் குமார வெல்கமவுக்கு கையளிக்கப்பட்டது.
அத்துடன் புதிய கட்சி அங்குரார்ப்பண நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுவல நகர சபை முன்னாள் தலைவர் புத்ததாச, புதிய சிங்ஹல உறுமய கட்சி தலைவர் சரத் மனமேந்திர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குடும்ப ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கூடியவர்கள் பயமின்றி முன்வர வேண்டும், மக்களுக்கு வழங்கப்பட்ட எவ்வித வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்று மக்களுக்கு தெரியும் ஆனால் அதனை தட்டிக் கேட்பதற்கு எவரும் முன்வருவதில்லை.
ஜானதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தாலும் தற்போது இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெறுவதிலும் பார்க்க அரசாங்கத்தை அமைத்து கொள்ள முடியாத ஒரு சிக்கல் நிலைமையே காணப்படுகிறது.
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளினை நோக்கி பயணிக்கும் போதுதான் அதற்கான வெற்றி கிடைக்கும். அதனை நோக்கமாகக் கொண்டே நவ லங்கா சுதந்திர கட்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டரநாயக்க அவர்கள் எந்த நோக்கத்திற்காக சுதந்திர கட்சியை ஆரம்பித்தாரோ அதேநோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முழு அர்ப்பணிப்புடன் புதிய லங்கா சுதந்திர கட்சி செயற்படும்.
2015 க்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன மூலம் சுதந்திர கட்சி வீணடிக்கப்பட்டு தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து சுதந்திர கட்சிக்கென இருந்த தனி தன்மையை இழந்துள்ளது.
அதன் காரணமாகவே சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறினோம். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
வீரகேசரி
No comments:
Post a Comment