கொரோனா வைரஸின் பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

கொரோனா வைரஸின் பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின்

கொரோனாவின் கோரப்பிடிக்கு இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெயினில் 3443 பேர் உயிழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரசுக்கு ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட சீனாவில்தான் பலியானோர் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை தாண்டியது. 

அதன் பின் இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்ல சீனா உயிரிழப்பை கட்டுப்படுத்தியது. இதனால் சீனாவை விட இரண்டு மடங்கு இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் அதிகமானோரை பலி கொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 2-வது இடத்திற்கு முந்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3443 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 3160 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 1934 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் இந்த வைரசால் 4 லட்சத்து 21 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தொட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad