திண்மக் கழிவகற்றல் வரியை குறைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

திண்மக் கழிவகற்றல் வரியை குறைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் அறவிடப்படும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ சேவை (குப்பை) வரியை 30 வீதத்தினால் குறைப்பது தொடர்பில் கல்முனை மாநகர சபை மேயர் ஏ.எம்.றகீப் அவர்கள் தனது அதிகாரத்தில் முடிவு செய்துள்ளது பாராட்டக்கூடியதாகும்.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் அவர்கள் தலைமையில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இம்மாதம் இடம்பெறவுள்ள பொதுச் சபை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினது வேண்டுகோளின் பேரில் பொதுமக்களின் நலன்கருதி கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அறவிடப்படும் குப்பை வரியை 30 சத வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதோடு அடுத்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த 30 வீதத்தால் குறைக்கப்பட வரியினை 50 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது அமைப்புகளும், பொது மக்களும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச் எம் எம் ஹரிஸ் அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்ததற்கமைய அதற்கான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று எதிர்வரும் பொதுச்சபை அமர்வில் இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் 30 வீதத்தால் குறைக்கப்பட வரியினை 50 வீதத்தால் குறைக்க அனுமதி பெற உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment