அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேஷன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாவட்டத்தில் எந்த பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என யாழ்.மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தேவையில்லாத ஒரு விடயம் கொழும்பிலிருந்து பொருட்கள் வழமைபோன்று யாழிற்கு எடுத்துவரப்பட்டு கொண்டிருக்கின்றன. அதைவிட நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறும் எந்தவித பிரச்சினையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்குமாறும். 

அத்தோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களைப் பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை. 

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும் எனினும் அவ்வாறு ஒரு பிரச்சினை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ். விஷேட நிருபர்

No comments:

Post a Comment