தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைத்திடப்பட்டு ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைத்திடப்பட்டு ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபா வழங்கப்படும்

(இராஜதுரை ஹஷான்)

தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைத்திடப்பட்டு ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பெருமளவிலான பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ளன. இதனால் அரசாங்கத்தினால் தற்துணிவுடன் எவ்வித தீர்மானங்களையும் முன்னெடுக்க முடியாது. அதனால் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.

ஆயிரம் ரூபா வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் கம்பனிகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தேயிலை தொழிற்துறையின் உற்பத்திசார் வரிகளை குறைப்பதற்கும், கம்பளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. 

ஆனால் தோட்ட கம்பனிகள் இதுவரையில் மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க எவ்வித இணக்கத்தினையும் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று மார்ச் முதலாம் திகதியில் இருந்து மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அப்போதும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. 

ஆகவே தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று அடுத்த வாரம் செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment