பூசா கடற்படை முகாமில் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 18, 2020

பூசா கடற்படை முகாமில் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம்

கொரோனா வைரஸ் உலகம் பூராகவும் பரவி வரும் நிலையில், இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், பூசா கடற்படை முகாமில் 04 மாடிகளைக் கொண்ட கட்டடமானது தனிமைப்படுத்தலுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனிமைப்படுத்தல் நிலையத்தில் 136 பேரை தங்க வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் கடற்படையினருக்கு அவசியமான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என்பன கராப்பிட்டி வைத்தியசாலை வைத்தியர் குழாமினால் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment